இலங்கையில் எரிபொருள் கொள்வனவில் ஈடுபட்ட மேலும் இருவர் உயிரிழந்தனர்
தங்கொடுவ மற்றும் வென்னபுவ ஆகிய பகுதிகளில் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் நின்ற 47 மற்றும் 51 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் இரண்டு நாட்களாக டீசல் பெறுவதற்காக தங்கொடுவ நகரில் வரிசையில் காத்திருந்த கோனவில பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய பொது மகன் ஒருவர் விழுந்த நிலையில் தங்கொடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து ஓட்டுநராவார்;.
இதேவேளை, வென்னபுவ பகுதியில் எரிபொருள் கொள்வனவு செய்ய வரிசையில் நின்ற 51 வயதுடைய மற்றொருவரும் உயிரிழந்துள்ளார்.
ஏற்கனவே இதற்கு முன்னதாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மூன்று மரணங்கள் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
