அமைச்சர்களின் நடவடிக்கைகள் மூலம் தெரியும் நாட்டின் நிலை : முஜிபுர் ரஹ்மான்
நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அமைச்சர்களின் நடவடிக்கைகள் மூலமாக இது தெரிவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கடனுக்கு வாங்கும் எண்ணையை பாரமெடுப்பதற்கு அமைச்சர்கள் துறைமுகத்திற்கு செல்லும் துர்ப்பாக்கிய நிலை இந்த நாட்டில் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்ததாவது,
இந்த அரசாங்கத்தில் பெற்றோலியத்துறை மற்றும் துறைமுகத்துறை அமைச்சர்கள் இந்தியாவிலிருந்து வரக்கூடிய பெற்றோல்,டிசல் கப்பலுக்காக துறைமுகத்தில் காத்திருந்தனர்.
புதியதொரு கலாசாரத்தினை நாட்டில் உருவாக்கியுள்ளார்கள்.இவர்கள் உலகத்திற்கும் இங்குள்ள சிங்கள மக்களுக்கு இந்தியா தங்களுக்கு உதவி செய்துள்ளதாக காட்டுகின்றார்கள்.
இந்தியாவினால் இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்டது போன்றுதான் அவர்கள் மக்களுக்கு அதனை காட்டினார்கள். ஆனால் இந்தியா இலங்கைக்கு இரண்டு மாத கடன் அடிப்படையிலேயே அதனை வழங்கியது.
இலங்கை அரசியல் வரலாற்றில் எந்த அமைச்சர்களும் கப்பல் வரும் வரையில்
காத்திருந்த சரித்திரம் இல்லை.புதிய கலாசாரம் ஒன்றை இந்த அரசாங்கம்
உருவாக்கியுள்ளது.
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan