வறுமைக்கு மத்தியில் வேகமாக அதிகரித்து வரும் வாகன திருட்டுகள் சம்பவங்கள்
அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வறுமைக்கு மத்தியில், வாகனத்திருட்டுகள் வேகமாக அதிகரித்து வருவதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன.
இதில் மோட்டார் சைக்கிள் திருட்டுகள் அதிகமாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் பதிவான மொத்த வாகனத் திருட்டுகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு மட்டும் பதிவான மொத்த எண்ணிக்கையை விட அதினமாகியுள்ளன.
2021ஆம் ஆண்டில் மொத்தம் 1,405 வாகனத் திருட்டுச் சம்பவங்கள் காவல்துறையில் பதிவாகியுள்ளன. இதில் ஒன்பது பேருந்துகள், ஆறு வேன்கள், பத்து லொறிகள், 34 கார்கள், 353 முச்சக்கர வண்டிகள், 975 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 18 வாகனங்கள் அடங்கியிருந்தன.

மொத்த வாகனத் திருட்டுகளின் எண்ணிக்கை
இந்த வருடம் செப்டெம்பர் மாதம் வரை பதிவான மொத்த வாகனத் திருட்டுகளின் எண்ணிக்கை 1,406 என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இதில் 12 பேருந்துகள், 25 வேன்கள், 16 லொறிகள், 14 கார்கள், 311 முச்சக்கர வண்டிகள், 1,016 மோட்டார் சைக்கிள்கள் இதில் உள்ளடங்கியுள்ளன.

பெரும்பாலான திருட்டுகள் வாகனங்களின் உரிமையாளர்களின் அலட்சியத்தால் நடைபெறுகின்றன என்று பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
வாகனங்கள் தொடர்பாக பொலிஸாரிடம் தெரிவிக்கப்படும் பெரும்பாலான முறைப்பாடுகள், "திருட்டுகள்" தவிர, "கொள்ளைகள்" அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வாகன உதிரிபாகங்களின் விலை அதிகரித்துள்ளதால் வாகன திருட்டுகள் அதிகரித்துள்ளன.
எனவே வாகன உரிமையாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும், யாராவது
தங்கள் வாகனங்களை எளிதில் திருடுவதை தவிர்க்கும் வழிகளை கையாளுமாறும் பொலிஸ்
பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 18 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri