இலங்கை வரும் சுற்றுலா பயணிகளை ஏமாற்றுவோருக்கு கடுமையாகும் சட்டம்!
வெளிநாட்டிலிருந்து இலங்கை வரும் சுற்றுலா பயணிகளிடம் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அதற்கமைய, கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகளிடம் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தற்போது விதிக்கப்படும் 25,000 ரூபா அபராதத்தை 100,000 ரூபாவாக அதிகரிக்க துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நடவடிக்கை எடுத்துள்ளார்.
அமைச்சர் விடுத்துள்ள பணிப்புரை
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும், முறைகேடுகள் குறித்த முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், முறைகேடுகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கான அறிக்கையை உருவாக்க சிவில் பாதுகாப்பு குழுக்களை நியமிக்கவும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
