சிறிய வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படலாம் என தகவல்
இலங்கை அரசியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ள நிலையில் சிறிய வரவு செலவுத் திட்டமொன்றோ அல்லது இடைக்கால கணக்கறிக்கையோ சமர்ப்பிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி ஜூன் முதல் ஆகஸ்ட் வரைக்குமான சிறிய வரவு செலவுத்திட்டம் அல்லது இடைக்கால கணக்கறிக்கை இம்மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது குறித்து நிதி அமைச்சர் அலி சப்ரி, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், திறைசேரி செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதாக தெரியவருகிறது.
எனினும், புதிய வரிவிதிப்பு முறையோ அல்லது வரிச் சீர்திருத்தங்களையோ இடைக்கால கணக்கறிக்கை மூலம் அறிமுகப்படுத்த வழி இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஆகவே அமைச்சரவை மற்றும் நாடாளுமன்ற அனுமதிக்கு உட்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுடன் வரி அதிகரிப்பை நிதி அமைச்சர் முன்மொழிய முடியும் என கூறப்படுகிறது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




