தேசிய விடயங்களில் முரண்படும் இலங்கையின் வெளியுறவு அமைச்சரும் செயலாளரும்
ஒரு நாட்டின் வெளியுறவு அமைச்சரும் வெளியுறவு செயலாளரும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் தமது அதிகாரப்பூர்வ பார்வையில் வேறுபடுவதில்லை
எனினும் இலங்கையில் அது நடந்திருக்கிறது.
இதனை ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அண்மையில் வெளிநாடுகளின் ராஜதந்திரிகளை சந்தித்தபோது வெளியிட்ட கருத்துக்கள் இவை:
1- மின்வெட்டு, எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய மருந்துப் பற்றாக்குறை நிலையில் மக்களின் கடுமையான கஸ்டங்களையும் அரசாங்கம் அறிந்திருக்கிறது.
2- ஆர்ப்பாட்டங்கள் அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படவில்லை. மாறாக அரசியல் கட்சி அல்லது ஆளும் கட்சிக்கு எதிராக மேற்கொள்ளப்படுகிறது.
3- ஆர்ப்பாட்டக்காரர்களின் சில கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவவை. அரசியலமைப்புக்கு வெளியில் சென்று நிபுணர் குழு ஒன்றின் ஊடாக இடைக்கால நிர்வாகம் ஒன்றை அமைப்பது என்பது யதார்த்தமற்றது.
4- அரசியலமைப்பின்படி தற்போதைய ஜனாதிபதி விலகினால், பிரதமர் அடுத்த 60 நாட்களுக்கு நாட்டை நடத்திச்செல்வதற்கும் அதன் பின்னர் தேர்தலுக்கு செல்வதற்கும் வழியுண்டு. அதேநேரம் எதிர்ப்புக்கள் காட்டப்பட்டாலும் நாடாளுமன்றில் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை உண்டு. அத்துடன் ஜனாதிபதியையே பிரதமரையோ மாற்றுவதற்கான இணக்கங்கள் இல்லை.
இந்தநிலையில் வெளியுறவு செயலாளர் ஜயநாத் கொலம்பகே கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வின்போது வெளியிட்ட கருத்துக்கள் இவை:
1- வெளிவிவகாரச் செயலாளர் என்ற வகையில், நாங்கள் இருக்கும் நிலை குறித்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். இன்று ஏனைய நாட்டு தூதர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பாடம் நடத்தும் நிலைக்கு நாம் விழுந்துவிட்டோம். நமது பெருமைக்குரிய இனத்திற்கு என்ன நடந்தது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
2- நமது நாடு ஆபத்தான காலத்தை எதிர்கொண்டுள்ளது. அதை நாம் கம்பளத்தின் கீழ் மறைக்க முடியாது.
3- இலங்கை நிச்சயமற்ற நிலையில் தேசிய புத்தாண்டு காலப்பகுதிக்குள் பிரவேசித்துள்ளது. செழிப்பு மற்றும் அமைதியின் புதிய பார்வையை ஏற்படுத்துவதற்காக அதிக அளவில் மக்களால் வாக்களிக்கப்பட்ட தலைவர்கள், கொடூரமான நிகழ்வுகளுக்கான தங்கள் பொறுப்புக்களை மறுத்து வருகின்றனர். மாறாக அவர்கள் பொதுமக்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர். அவர்களை பலிகடா ஆக்க விரும்புகிறார்கள். இத்தகைய நயவஞ்சக நகர்வுகள் அவர்கள் மீது பூமராங் போன்று பாயவே செய்யும்;. இவ்வாறான விடயங்களில் வரலாறு பல உதாரணங்களைக் காட்டியுள்ளது.





பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
