இந்த ஆண்டு இலங்கைக்கு ஒரு இருண்ட யுகமாக அமையும் - வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை தகவல் (VIDEO)
இந்த ஆண்டு இலங்கைக்கு ஒரு இருண்ட யுகமாக அமையும் என மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர்.வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் தற்போது மருந்து தட்டுப்பாடு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.இது தொடர்பில் பல தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் சுகாதார அமைச்சு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
இலங்கையில் சுமார் 144 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவியுள்ளதுடன்,சில வைத்தியசாலைகளில் நாளாந்தம் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு கூட தட்டுப்பாடு நிலவியுள்ளது.
எனவே இலங்கை சுகாதார துறையை பொருத்தமட்டில் மருந்து தட்டுப்பாடு பாரிய பிரச்சினையான உருவெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.