அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்
வெளிநாட்டு விடுமுறைக்கு விண்ணப்பிக்கும் அரச ஊழியர்கள் பயன்படுத்தும் ஏ4 அளவை விட பெரிய 4 பக்க விண்ணப்ப படிவத்தை ஏ4 தாளில் 2 பக்கங்களாக குறைப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.
அரச சேவையில் நடைமுறைப்படுத்தும் சிக்கனக்கொள்கையின் அடிப்படையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் ஆலோசனைக்கு அமைய இந்த விடயம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.
காகிதம் மற்றும் பெருந்தொகை பணம் சேமிப்பு
இதன் மூலம் அந்த படிவத்திற்கான காகிதச்செலவில் சுமார் 50 சதவீதம் சேமிக்க முடியும் என்றும், ஆண்டுதோறும் வெளிநாடு செல்ல விண்ணப்பிக்கும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்துக்கும் அதிகமாக இருப்பதால், புதிய காகிதம் மற்றும் பணத்தை அரசாங்கம் கணிசமான அளவு சேமிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே இருந்த விணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்ட அனைத்து விடயங்களும் புதிய படிவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் விண்ணப்பங்களை அச்சடிப்பதற்கு அரச அச்சகத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.