பொதுமக்களின் வருகையின்றி வெறிச்சோடிப் போன பொருளாதார மத்திய நிலையங்கள்
விலையேற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக பொதுமக்களின் வருகையின்றி பொருளாதார மத்திய நிலையங்கள் வெறிச்சோடிப் போயுள்ளன.
நாராஹேன்பிட பொருளாதார நிலையத்தில் சனிக்கிழமை எடுத்து வரப்பட்டிருந்த காய்கறி வகைகளில் அரைவாசிக்கும் மேற்பட்டவை விற்பனை செய்து கொள்ள முடியாத நிலையில் எஞ்சியுள்ளது.
அத்துடன் பொதுமக்களின் பொருளாதார நெருக்கடி காரணமாக காய்கறிகள் மட்டுமன்றி அரிசி உள்ளிட்ட ஏனைய பொருட்களின் விற்பனையும் வீழ்ச்சியடைந்துள்ளது.
மூடப்படும் கடைகள்
கொழும்பை அண்மித்த மீகொட மற்றும் போகுந்தறை பொருளாதார மத்திய நிலையங்களிலும் பொதுமக்களின் வருகை கணிசமான அளவில் குறைந்துள்ளது.
இதன் காரணமாக வர்த்தகர்கள் மாத்திரமன்றி காய்கறி உற்பத்தியாளர்களும் பெரும் பாதிப்பை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.
வர்த்தகர்கள் பலர் வாடகை செலுத்த வழியின்றி தங்கள் கடைகளை மூடத் தொடங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.