இலங்கையிலிருந்து இரகசியமாக வெளியேறும் வைத்தியர்கள்!
இலங்கையிலிருந்து கடந்த 8 மாதங்களில் சுமார் 500 வைத்தியர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து வைத்தியர்கள் வெளிநாடு செல்வது பாரதூரமான விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடு செல்லும் வைத்திய நிபுணர்கள்
கடந்த இரண்டு மாதங்களில் வெளிநாடு சென்ற வைத்தியர்கள் பலர் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்காமல் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பதவி விலகலை அறிவித்துள்ள வைத்திய நிபுணர்களின் எண்ணிக்கை ஐம்பதுக்கும் அதிகமாக உள்ளதாகவும் வைத்தியர் சமில் விஜேசிங்க வலியுறுத்தியுள்ளார்.
வைத்தியர்களின் புலம்பெயர்வு நாட்டின் சுகாதாரத்துறையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இந்நிலைமை நாட்டின் அப்பாவி மற்றும் ஏழை மக்களை கடுமையாக பாதிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri