சகோதரர் பசிலை விலகக்கோரி தூதர்களை அனுப்ப நிர்ப்பந்திக்கபட்ட மஹிந்த: கொழும்பு அரசியலில் முக்கிய தருணங்கள்
தமக்கு நம்பிக்கைக்குரியவர்களாக செயற்பட்டு வந்த முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் மற்றும் திறைசேரியின் செயலாளர் ஆட்டிக்கல ஆகியோரை பதவி விலகுமாறு ஜனாதிபதியே கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் வெளிநாட்டவரான பசில் ராஜபக்சவுக்கு இலங்கையின் நாடாளுமன்றத்துக்குள் பிரவேசிப்பதற்காக 20ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டு வந்ததும், அவரை நிதியமைச்சராக நியமித்ததும் ஜனாதிபதியே என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ராஜபக்ச அரசியல் வரலாற்றில் ஒருவர் மற்றும் ஒருவரை பதவி நீக்கம் செய்த முதல் சந்தர்ப்பம் இதுவாக அமைந்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று கூறுகிறது.
அதிலும் பிரச்சினை உக்கிரமடைந்தபோது, முன்னாள் அமைச்சர்கள் விமல் வீரவன்ச மற்றும் கம்மன்பில ஆகியோரின் கோரிக்கைக்கு இணங்க ஜனாதிபதி அமைச்சரவையின் பதவி விலகலுக்கான கோரிக்கையை விடுத்தார்.
இதன்போது அலரிமாளிகைக்கு அமைச்சர்களை அழைத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்சவை பதவி விலகக்கோரி, இரண்டு தூதர்களை அனுப்பியுள்ளார்.
அவர்கள் இருவரும் பசிலை இணக்கத்துக்கு கொண்டு வர பல மணிநேரத்தை செலவிட்டுள்ளனர். எனினும் இறுதியில் அவர் அதற்கு அதிருப்தியுடன் உடன்படவேண்டியேற்பட்டது.
அதேநேரம் பசில் ராஜபக்ச விலகாதுபோனால் தாமும் விலகுவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தீர்மானித்திருந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் அஜிட் நிவாட் கப்ராலை பதவி நீக்கம் செய்யப்படப்போகிறார் என்ற பேச்சு வெளியான போது சிறிது காலத்துக்கு முன்னர் அதனை ஜனாதிபதியே மறுத்திருந்தார்.
எனினும் அதே ஜனாதிபதி, தற்போது கப்ராலை விலகிச் செல்ல கோரியுள்ளார். லண்டனுக்கு தனிப்பட்ட பயணமாக சென்று திரும்பிக்கொண்டிருந்தபோது, கட்டார் விமான நிலையத்தில் வைத்து, கப்ராலிடம் பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபயவின் கோரிக்கை கூறப்பட்டது.
எனினும் அவர் அதனை காட்டிக்கொள்ளாமல், தாம் பதவியில் இருந்து விலகுவதை போன்று இலங்கை வந்ததும் அறிக்கையை வெளியிட்டார்.





நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam

பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
