வெளிநாட்டு பிரஜை ஒருவரினால் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம்
ரஷ்ய பிரஜை ஒருவரினால் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையில்,சுற்றுலா பயணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹப்புத்தளை பகுதியில் இலங்கைக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொண்டிருந்த ரஷ்ய பிரஜை ஒருவர் வாகன நெரிசல் காரணமாக, கொள்கலனில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு முயற்சித்துள்ளார்.
வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்னுரிமை
இதன்போது வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும், சுற்றுலாப்பயணி எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு வரிசையில் காத்திருந்த மக்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து எரிபொருள் நிலையத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு, நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan