இலங்கையில் வாழும் 6.2 மில்லியன் மக்கள் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கை தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் விளைவாக, ஒவ்வொரு பத்தில் நான்கு குடும்பங்கள் தங்கள் வருமானத்தில் குறைப்பை மேற்கொண்டு வருவதாக உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.
2022 ஜூன் முதல் டிசம்பர் வரையிலான அமைப்பின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 22 மில்லியன் மக்களில் 6.2 மில்லியன் மக்கள் மிதமான மற்றும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூச்சிக்கொல்லிகளை வழங்க உடனடி நடவடிக்கை
இதற்கிடையில், ஒவ்வொரு இரண்டு வீடுகளிலும் ஒருவர் தற்போது உணவைக் கொள்வனவு செய்ய முடியாமல், சமாளிக்கும் வழிமுறைகளை நம்பியிருக்கின்றனர்.
40வீதம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தை நம்பியிருந்தாலும், அது பாரிய சீர்குழைவுக்கு உள்ளாகியுள்ளது.
இதேவேளை 2022 ஆம் ஆண்டில் நெல் அரிசி உற்பத்திச் செலவுகள் 100 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளன.
எனவே தரமான விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை விவசாயிகளுக்கு வழங்க
உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.