நாங்கள் நீதிக்காக அழுகிறோம் : ஈஸ்டர் தாக்குதல் இன்றுடன் மூன்று ஆண்டுகள் (Video)
ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு இன்றுடன் மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
2019ம் ஆண்டு இன்றைய நாளில் கொண்டாடப்பட்ட ஈஸ்டர் தினத்தன்று, மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 277 பேர் உயிரிழந்திருந்தனர்.
400ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர். அத்துடன், 40 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டதுடன், 45 சிறார்களும் இந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்திருந்தனர்.
இந்த கொடூரமான தாக்குதலின் மூன்றாண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று விசேட ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றது.
நாங்கள் நீதிக்காக அழுகிறோம் என்ற தொனியில் இன்று இந்த விசேட ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றது.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, இலங்கைக்கான வத்திக்கான் தூதுவர், அருட்தந்தைகள், மகா சங்கத்தினர், பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அவர்களுக்கான அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
இதன்போது, பேராயரின் தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெறவுள்ளது.
இதேவேளை, கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்திலும், மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் மற்றுமொரு நினைவேந்தல் அனுஷ்டிப்பு நடைபெறவுள்ளன.


புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan