தமிழர் பகுதிகளில் களைகட்டும் தீபாவளி பண்டிக்கை! கொண்டாட்டத்திற்கு ஆயத்தமாகும் மக்கள்
நாளைய தினம் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதத்தில் கிளிநொச்சி மக்களும் தங்களை தயார்படுத்திவருகின்றனர்
தீபாவளி வியாபாரம் கிளிநொச்சி நகரப் பகுதியில் தீபாவளியை முன்னிட்டு வர்த்தக நிலையங்கள் அனைத்திலும் மக்கள் அலைகடலென திரண்டு தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்களை கொள்வது செய்வதை அவதானிக்க முடிந்துள்ளது.
கடந்த காலங்களில் பொருட்களுக்கான வரி அதிகரிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களுக்கு தேவையான ஆடை வகைகளை இறக்குமதி செய்து விற்பனை செய்வதில் இடர்பாடுகள் காணப்பட்டதாகவும் இம்முறை அவ்வாறு இல்லாது சகல வழிகளிலும் பொருட்களை இறக்குமதி செய்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடியதாக இருப்பதாகவும் குறைந்த விலையில் மக்களுக்கு பொருட்களை வழங்க கூடியதாக இருப்பதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக தகவல் -யது
யாழ்ப்பாணம்
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக மக்கள் பொருட்கள் ஈடுபடுவது வழமை.
அந்தவகையில் நாளையதினம் கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகைக்காக மக்கள் இன்றையதினம் யாழ்ப்பாண நகர் பகுதியில் பல்வேறு விதமான பொருட்களை கொல்வனம் செய்வதை அவதானிக்க முடிந்தது.
புடவைகள், பட்டாசுகள், இனிப்பு பண்டங்கள், ஆபரணங்கள் போன்றவற்றை மக்கள் கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிந்தது. இதனால் யாழ்ப்பாண நகரத்தில் சன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலதிக தகவல்- கஜிந்தன்
வவுனியா
தீபாவளி திருநாளை முன்னிட்டு வவுனியாவில் வியாபாரம் களை கட்டியுள்ளதுடன், நகரில் அதிக சனநெரிசல்களையும் அவதானிக்க முடிகிறது.
நாளையதினம் உலகம் பூராவும் உள்ள இந்து மக்களினால் தீபாவளி திருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் அதனை கொணடாடும் முகமாக வவுனியா நகரிற்கு அதிகளவிலான மக்கள் வருகை தந்து புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்பு பண்டங்களை கொள்வனவு செய்ததை அவதானிக்க முடிந்தது.
கடந்த வருடத்தை விட இம் முறை தீபாவளி வியாபாரம் களை கட்டியுள்ளதுடன், மக்கள் தீபாவளி கொண்டாட்டத்திற்கு ஆர்வத்துடன் தயாராகி வருவதையும் அவதானிக்க முடிந்தது.
மேலதிக தகவல்- திலீபன்
வடமராட்சி
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வடமராட்சி பகுதிகளில் இம்முறை தீபவளி சந்தை சோகையிழந்துள்ளது.
வழமையான தீபாவளி மற்றும் பண்டிகை தினங்களுக்கு முதல்நாள் நகர்களில் பல்வேறு பகுதிகளிலும் அதிகளவான மக்கள் பொருட்கள் கொள்வனவில் ஈடுபடுவது வழமை.
ஆனால் இன்று பருத்தித்துறை, மந்திகை, நெல்லியடி நகரங்கள் சோகையிழந்துள்ளனர்.
இதேவேளை பருத்தித்துறையிலிருந்து மருதங்கேணி கட்டைக்காடு கேவில் ஊடக போக்குவரத்தில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை காலை 11:30 மணிக்கு பின்னர் தமது சேவையை நிறுத்தியுள்ளதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
பருத்தித்துறை மருதங்கேணி கட்டைக்காடு ஊடாக கேவில் வரை சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சேவைகளும் நீண்டகாலமாக பருத்தித்துறை மருதங்கேணி கட்டைக்காடு ஊடாக 12:30 மணியுடன் சேவையை நிறுத்தியுள்ளனர்.
ஆனால் இலங்கை போக்குவரத்து சபை வருமானம் அதிகமான பருத்தித்துறை யாழ்ப்பாணம் பேருந்து சேவையை மட்டும் ஒழுங்கு மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த போக்குவரத்து சேவைகளில் காணப்படு குறைபாடுகள் தொடர்பாக பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஜீவனிடம் முறையிட்டுருந்தபோது பருத்தித்துறை கேவில் பருத்தித்துறை யாழ்ப்பாணம் 751 வழித்தடங்களை சீரமைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தும் இதுவரை பருத்தித்துறை சாலை முகாமை எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மலையகம்
மக்களுக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்த வந்த நரகாசுரனை அழித்து இருள் நிறைந்த மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய திருநாளான தீபாவளி பெருநாளினை கொண்டாடுவதற்காக மலையகத்தில் வாழும் மக்கள் நாளை மலர உள்ள தீபத்திருநாளினை கொண்டாடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
இதனையொட்டி பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கொட்டும் மழையினையும் பொருப்படுத்தாது நகரங்களில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மலையக நகரங்களில் கூடியிருந்தனர்.
ஹட்டன் நகரில் இன்று காலை முதல் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வருகை தந்திருந்தனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெசல் ஏற்பட்டன. போக்குவரத்து நெரிசலினை கட்டுப்படுத்தவதற்காக பெரும் எண்ணிக்கையிலா பொலிஸார் நகரில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
பெரும்பாலான மக்கள் சமயத்திற்கு முக்கியத்துவமளித்து புத்தாடைகளையும் பூஜை பொருட்களையும் இறந்தவர்களை நினைவு கூறுவதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கும் அதிகமான மக்கள் வருகை தந்திருந்தனர்.
எது எவ்வாறான போதிலும் இலங்கையில் பல நெடுங்காலமாக மாறி மாறி வந்த அரசாங்கங்களால் மலையக மக்களின் வாழ்வில் பிரகாசமான தீபா ஒளி வீசவில்லை என்றுதான் கூற வேண்டும் அவர்களின் இன்னல்கள் அவ்வாறே காணப்பட்டு வந்த நிலையில் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் மக்களின் வாழ்வில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இம்முறை தீபத்திருநாளினை கொண்டாட உள்ளதாக பலரும் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.










