பேச்சுவார்த்தை இந்தியாவின் அனுசரணையோடு உலக நாடுகளின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன்

Selvam Adaikalanathan President of Sri lanka
By Ashik Dec 24, 2022 11:39 AM GMT
Report

ஜனாதிபதியால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை இந்தியாவின் அனுசரணையிலும் உலக நாடுகளின் மேற்பார்வையிலும் நடைபெற வேண்டும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (23.12.2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நில அபகரிப்புச் செயல்பாடு

அவர் மேலும் தெரிவிக்கையில்,“இப்பொழுது பரபரப்பாக பேசப்படும் விடயம் ஜனாதிபதியின் இந்த பேச்சுவார்த்தை முயற்சி சம்பந்தமாகவே, எங்களைப் பொறுத்தமட்டில் 31ம் திகதி வரை கால அவகாசம் கொடுத்திருந்தோம்.

பேச்சுவார்த்தை இந்தியாவின் அனுசரணையோடு உலக நாடுகளின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன் | Srilanka Crisis Political Situation Ranil  

அதில் இராணுவம் ஏனைய திணைக்களங்கள் பிடித்திருக்கின்ற நிலங்கள், பேச்சுவார்த்தை ஆரம்பமாகும் நாளிலிருந்து நிலங்கள் அபகரிக்கும் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்றும் ஒரு தீர்மானமாக அதைச் சொல்லி இருந்தோம்.

அந்த அடிப்படையில் ஜனாதிபதி இந்த 31ஆம் திகதி வரையில் கால அவகாசம் கேட்டிருந்தார். இராணுவம் எந்தெந்த இடங்களை விடப்போகிறது என்ற கேள்வி இருக்கிறது. 

பேச்சுவார்த்தை இந்தியாவின் அனுசரணையோடு உலக நாடுகளின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன் | Srilanka Crisis Political Situation Ranil

இராணுவம் கையகப்படுத்தி உள்ள இடங்கள்

பேச்சுவார்த்தையின் போது நாங்களும் இந்த இராணுவம் கைப்பற்றிய சில இடங்களை வரைமுறையோடு எத்தனை ஏக்கர் எங்கெங்கு பிடிக்கப்பட்டு இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட இருக்கிறோம்.

அதேபோல் மிக மோசமாக வயல் காணிகளையும் மக்களின் வீட்டுக்கு காணிகளையும் எல்லைகளை போடுகின்ற ஒரு துர்பாக்கிய நிலை காணப்படுகிறது.

பேச்சுவார்த்தை என்பது அவசரப்பட்டு செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை, பேச்சுவார்த்தை என்பது அனைவரையும் ஒன்று திரட்டுகின்ற அல்லது ஒற்றுமை படுத்துகின்ற செயற்பாடாக அமைய வேண்டும்.

ஆனால் இந்த 31 ஆம் திகதி வரை எந்த ஒரு திருப்பு முனையும் இல்லாத நிலை ஜனாதிபதி அவர்கள் அதில் எதிர்வரும் 10, 13 வரை திகதிகளை நிர்ணயம் செய்திருக்கின்றார். இது எவ்வாறு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை.

பேச்சுவார்த்தை இந்தியாவின் அனுசரணையோடு உலக நாடுகளின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன் | Srilanka Crisis Political Situation Ranil

கோரிக்கைகள் நடைமுறைக்கு

31ம் திகதிக்கு முன்பு நாங்கள் வைத்த கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் நாங்கள் ஆணித்தரமாக இருக்கின்றோம்.

அரசியல் கைதிகள் 5 பேர் மட்டுமே விடுதலை செய்ய முடியும் என்று கூறுவது நல்லபடியாக இருந்தாலும் அனைத்து அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

குறிப்பாக தீர்ப்பு சொல்லப்பட்டு வெளியில் வந்தவர்களுக்கு மீண்டும் வழக்கு போடப்படும் ஒரு துர்ப்பாக்கிய நிலை இருக்கிறது. ஜனாதிபதி இதை கவனம் எடுத்து அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கு ஜனாதிபதியால் முடியும்.

காணாமல் போனவர்களுடைய விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கையாக இருக்கிறது.

ஆகவே இந்த விடயத்தில் அரசாங்கம் மெத்தனப் போக்கையே காட்டுகிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு முந்தைய நிதி அமைச்சர் ஒரு லட்சம் என்றும் இந்த நிதி அமைச்சர் 2 லட்சம் தருவதாக கூறுகிறார்கள்.

பேச்சுவார்த்தை இந்தியாவின் அனுசரணையோடு உலக நாடுகளின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன் | Srilanka Crisis Political Situation Ranil

எங்களுடைய உறவுகளின் பெறுமதி என்பது வெறும் 2 லட்சம் தானா ? அவை நியாயமாக விசாரிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு என்ன நடந்தது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது பற்றி அரசாங்கம் உறவுகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு பிரச்சினைகள் இருக்கையில் நாங்கள் உடனடியாக சென்று இந்த பேச்சுவார்த்தை கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு இதனை மலிவுபடுத்துகின்ற செயற்பாட்டினை செய்யக்கூடாது என்பது என்னுடைய கருத்து.

மேலும் எங்களுடைய போராளிகள் இயக்கங்கள் அனைத்தும் உருவாகியது இந்த நிலத்தை காப்பாற்றுவதற்காக. அதற்காக பல போராளிகள் பல மக்கள் உயிர் தியாகம் செய்திருக்கின்றார்கள். ஆகவே நிலங்கள் விடுவிக்கப்படாத வரைக்கும் பேச்சுவார்த்தை என்பது அர்த்தமற்று போகும்.

பேச்சுவார்த்தை இந்தியாவின் அனுசரணையோடு உலக நாடுகளின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன் | Srilanka Crisis Political Situation Ranil

காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்

அவ்வாறு பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்ட உடன் பிடிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் ஆனால் இது எப்படி சாத்தியம் எவ்வாறு அமையப் போகிறது என்பது தெரியாது.

ஆனால் இப்போது இருக்கின்ற சூழ்நிலையில் தமிழ் தரப்பு ஆகிய நாங்கள் சாதிக்க முடியும். பேச்சுவார்த்தை விடயத்தில் நாங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

எங்களுடைய செயற்பாடுகளின் படி பேச்சுவார்த்தை என்பது இந்தியாவினுடைய அனுசரணையோடு ஏனைய நாடுகளின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என்பதும் எங்களுடைய கோரிக்கையாக நாங்கள் முன்வைத்திருக்கிறோம். 

ஜனாதிபதியின் நிகழ்ச்சித் திட்டம் 

அந்த வகையில் சில பேர் கேட்கிறார்கள் பேச்சுவார்த்தை ஆரம்பத்தில் ஏன் இதைச் சொல்லவில்லை என்று? ஆனால் நான் அதை சொல்லாததற்கான காரணம் ஜனாதிபதியின் நிகழ்ச்சித் திட்டம் என்ன நடக்கப் என்பது எங்களுக்கு தெரியவில்லை.

ஆனால் இப்பொழுது நாங்கள் ஒரு கால வரையறையை கொடுத்திருக்கின்றோம். அதன் அடிப்படையில் அவை நடைபெற வேண்டும் ஜனாதிபதி நல்ல நோக்கத்திற்காக இதனை கையில் எடுத்துள்ளாரா? அல்லது பொருளாதாரப் பிரச்சினைகளை மேம்படுத்துவதற்காக செய்கிறாரா என்றொரு கேள்வி இருக்கிறது.

ஆனாலும் இந்த சந்தர்ப்பங்களில் வாய்ப்பை நாங்கள் நழுவ விட்டு விடக்கூடாது.

பேச்சுவார்த்தை இந்தியாவின் அனுசரணையோடு உலக நாடுகளின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன் | Srilanka Crisis Political Situation Ranil

ஆகவே தமிழர் தரப்பு எல்லோருமாக சேர்ந்து முடிவுகளை எடுக்கும் பட்சத்தில் எங்களுடைய நிபந்தனைகளையும் எங்களுடைய கோரிக்கைகளையும் சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமையும்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US