வடக்கு ஆளுநரின் செயலாளர் விடுத்த அழைப்பை புறகணிக்கும் கஜேந்திரகுமார் அணி
வடக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைய, ஆளுநரின் செயலாளரினால் விடுக்கப்பட்ட இன்றைய சந்திப்புக்கான அழைப்பை யாழ். மாநகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி, கஜேந்திரகுமார் அணி ஆகியோர் சாதகமாக ஏற்றுச் செயற்படமாட்டார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய (05.01.2023) கூட்டத்தில் சுமார் 30 கட்சி உறுப்பினர்கள் பங்குபற்ற மாட்டார்கள் என அந்தந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
யாழ்.மாநகர சபையில் குழப்ப நிலை
முன்னாள் மேயர் வி.மணிவண்ணன் தலைமையிலான அணியினர் மற்றும் உதிரி கட்சிகளைச் சேர்ந்த 10 முதல் 15 மாநகர சபை உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தில் பங்குபற்றக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
யாழ். மாநகர சபையின் மேயர் பதவியிலிருந்து மணிவண்ணன் விலகியதையடுத்து மாநகர சபையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே இது தொடர்பில் ஆராய வடக்கு
மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைய ஆளுநரின் செயலாளரினால் யாழ். மாநகர சபை
உறுப்பினர்களுக்கு இன்று கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.



