வவுனியா விவசாயிகளின் வங்கி கணக்குகளில் உதவித் தொகை வைப்பு: மாவட்ட உதவி ஆணையாளர்
ஒரு ஹெக்ரெயருக்கு உட்பட்ட நிலத்தில் விவசாயம் செய்யும் 9486 விவசாயிகளுக்கு உதவித் தொகை வங்கிகளில் வைப்பு செய்யப்பட்டு வருவதாக கமநல அபிவிருத்தி திணைக்கள வவுனியா மாவட்ட உதவி ஆணையாளர் நே.விஸ்ணுதாசன் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவித்தொகை தொடர்பில் நேற்று (03.01.2023) கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

விவசாயிகளுக்கான உதவித் தொகை
வவுனியா மாவட்டத்தில் 2022/23 பெரும்போகத்தில் 21,864 விவசாயிகள் பயிர்செய்கையில் ஈடுபட்டுள்ளனர். 23 ஆயிரத்து 369 ஹெக்ரெயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் முதல் கட்டமாக விவசாயிகளுக்கான உதவித் தொகையாக ஒரு ஹெக்ரெயருக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்பட இருக்கின்றது. இதன்படி 9486 விவசாயிகளுக்கு இந்த உதவித் தொகை திங்கள் கிழமை முதல் வங்கியில் வைப்பு செய்யப்படுகிறது.
அடுத்த கட்டமாக ஒரு ஹெக்ரெயருக்கு மேல் விவசாயம் செய்த விவசாயிக்கு உதவித்தொகை வழங்கடும். இரண்டு வாரங்களுக்குள் முழுமையாக அவை வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
அடேங்கப்பா நம்ம முத்துவா இது, ஆளே மாறிட்டாரே, என்ன செய்துள்ளார் பாருங்க... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri