திருமண விண்ணப்பத்தை நிராகரித்த அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல்: வெளியான காரணம்
அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல், நபர் ஒருவரின் திருமணத்திற்கான சமய அங்கீகாரத்தை நிராகரித்துள்ளது.
குறித்த பிரதேசத்தில் வசித்து வரும் நபர் ஒருவரால் தனது திருமணத்தை நடாத்தி வைக்குமாறு ஜும்மா பெரிய பள்ளிவாசலுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.
விண்ணப்பத்தை பரிசீலனை செய்த ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை, குறித்த நபர் போதை பொருள் பாவனைக்கு அடிமையானவர் என உறுதிப்படுத்தப்பட்டதால் திருமண சமய அங்கீகாரத்தை திறுத்தியதுடன் அவரின் விண்ணப்பத்தையும் நிராகரித்துள்ளது.
புனர்வாழ்வு மையத்தில் அனுமதி
குறித்த திருமணத்திற்கான மணமகனை போதைப் பொருள் புனர்வாழ்வு மையத்தில் அனுமதிப்பதுடன் அங்கிருந்து நற்சான்றிதழ் பத்திரம் பெற்று மீண்டும் பள்ளிவாசலில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 6 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
