ஜனாதிபதித் தேர்தல் குறித்து மூடிய அறைக்குள் மந்திராலோசனை
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைத்துவிட்டு உடனடியாக ஜனாதிபதித் தேர்தல் ஒன்றுக்குச் செல்வது பற்றிய மந்திராலோசனை இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச ஆகிய மூவரும் ஒன்றிணைந்தே இது பற்றி ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்தச் சந்திப்பில் வேறு எவரும் கலந்து கொள்ளவில்லை,

தேர்தலுக்கான வழிகள்
இந்த ஆலோசனையை முதலில் சமர்ப்பித்த வஜிர அபேவர்தன, உடனடியாக
ஜனாதிபதி தேர்தலை நடத்தினால் அதனை எவ்வாறு வெற்றி கொள்வது எனும் வழிகளை பசிலிடம் கூறியுள்ளார்.
நான்கு வருடங்கள் நிறைவில் ஜனாதிபதி விரும்பினால் ஜனாதிபதித் தேர்தலை நடத்தலாம். அவசரம் ஏற்பட்டால் அடுத்த வருடம் நடுப்பகுதியிலும் தேர்தலை நடத்தலாம்.
இதை வைத்து வேறு எந்தத் தேர்தலையும் நடத்தாது அடுத்த வருட நடுப் பகுதியில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவோம் என்று வஜிர அங்கு கூறியுள்ளார்
தமிழ் மக்களின் வாக்குகள்
தேர்தல் இடம்பெற்றால் வடக்கு - கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளும் மலையகத் தமிழர்களின் வாக்குகளும் ரணிலுக்கு கிடைக்கும் என்று சுட்டிக்காட்டியதோடு தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் தமிழர்கள் நிச்சயம் ரணிலுக்கே வாக்களிப்பர் என்றும் முஸ்லிம்களும் அவ்வாறே செய்வார்கள் என்றும் இதன்போது குறிப்பிட்டார்.

'மொட்டு' கட்சியின் கைகளில் இருக்கும் சிங்கள வாக்குகளை ரணிலுக்குப்
பெற்றுத் தருவதற்கு நீங்கள் உரிய நடவடிக்கை எடுத்தால் எந்தவித சிக்கலும் இன்றி
இலகுவாக ரணிலால் வெல்ல முடியும் என்றும் வஜிர மேலும் தெரிவித்துள்ளார் என தெரியவருகிறது.
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
உக்கிரமடையும் ஈரான் போர்... இக்கட்டான நேரத்தில் கைவிரித்த ரஷ்யா: இந்தியாவிற்கு புது சிக்கல் News Lankasri