அண்மையில் விடுதலையான அரசியல் கைதி பிரமஸ்ரீ சந்திர ஐயர் ரகுபதி சர்மா கண்ணீர் மல்க கூறியவை
சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலையான பின்னரே நான் எனது குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வேன் என அரசியல் கைதியாக இருந்து அண்மையில் விடுதலை செய்யப்பட்ட இந்து மத குருவான பிரமஸ்ரீ சந்திர ஐயர் ரகுபதி சர்மா கண்ணீர் மல்க கவலை தெரிவித்துள்ளளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மாத்திரமே இவர்களை விடுதலை செய்வதற்கான அதிகாரம் உள்ளதாகவும், எனவே ஜனாதிபதி அவர்களை விடுதலை செய்வதற்கு முன்வர வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசியல் கைதிகளின் விடுதலை
தைப்பொங்கலை முன்னிட்டு இன்று காலை யாழ். பல்கலைக்கழக முன்றலில் 'இலவச பொங்கல்' எனும் நிகழ்வு இடம்பெற்றது.
குரல் அற்றவர்களுக்கான குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகனின் ஏற்பாட்டில் அரசியல் கைதிகளின் விடுதலை வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கவலை வெளியிட்டிருந்தார்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
