வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு திடீர் இடமாற்றம்
வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு தேவை கருதிய திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள நிலையில், வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக சானக விக்கிரமசிங்க நேற்று (06.01.2023) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய சுபத் கலகமகே கொழும்பு நராம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு (வாகனப் பகுதி) பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வெற்றிடம்
இதனால் வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வெற்றிடத்திற்கு குண்டகசாலையில் அமைந்திருந்த பொலிஸ் பயிற்சிப் பிரிவில் பொறுப்பதிகாரியாக செயல்பட்ட சானக விக்கிரமசிங்க என்பவர் வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுப வேளையில் மத ஆசிர்வாதத்துடன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்போது மதகுருமார், அவரது குடும்பத்தினர், பொலிஸ் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
