சுமந்திரனுடனான பேச்சுவார்த்தை உத்தியோகப்பூர்வமானதில்லை: ஜனாதிபதி விக்கிக்கு கடிதம்
சுமந்திரனுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை உத்தியோகப்பூர்வமானதில்லை என ஜனாதிபதி சீ.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் மூலமாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசு கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கடந்த (21.12.2022) அன்று நடைபெற்றிருந்தது.
கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு
இந்த சந்திப்பு தொடர்பாக ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
சீ.வி. விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கொழும்பில் இல்லாத நேரத்தில் சுமந்திரன் இந்தச் சந்திப்பை ஒழுங்கு செய்திருந்ததாக குற்றாச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
கோரிக்கை
இந்த சந்திப்பினை ஒத்திவைக்கக்கோரி சீ.வி. விக்னேஷ்வரனினால் கடிதம் ஒன்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த போதும் திட்டமிட்டபடி கூட்டம் நடைபெற்றிருந்தது.
இன்று சீ. வி. விக்னேஸ்வரனுக்கு பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள ஜனாதிபதி
செயலகம் இந்த சந்திப்பு உத்தியோகப்பூர்வமானது இல்லை எனவும் எதிர்காலத்தில்
அடுத்த சந்திப்புக்கான ஒழுங்கு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளதாக சீ. வி.
விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
