தகாத உறவில் ஈடுபட்ட பௌத்த தேரர் விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
நவகமுவ பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 சந்தேகநபர்களும் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்களை நேற்று கடுவலை நீதிவான் விசாரணைகளுக்காக முன்னிலைப்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 8 பேரையும் தலா 100,000 ரூபா சரீரப் பிணையிலும் கடுமையான பிணை நிபந்தனைகளிலும் விடுவிக்குமாறு கடுவலை நீதவான் சனிமா விஜேபண்டார உத்தரவிட்டுள்ளார்.
நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையொன்றில் பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் ஒரே அறையில் இருந்த நிலையில் பிரதேச மக்களால் தாக்கப்படும் காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட பெண்களை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 8 பேருக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
