இலங்கையில் அடையாளம் தெரியாத சடலங்கள் மீட்பும் மர்மமான முறையில் இடம்பெறும் மரணங்களும் : குற்றப் பார்வை ( Video)
இலங்கையின் பல பகுதிகளில் குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.
அடையாளம் தெரியாத சடலங்கள் ஆங்காங்கே மீட்கப்பட்டு வருவதுடன் மர்மமான முறையில் சிலர் உயிரிழக்கும் சம்பவங்களும் பதிவாகின்றன.
கொலமுனஓயா கால்வாய்க்கு அடியிலிருந்து உந்துருளி மற்றும் எலும்பு துண்டுகள் சில காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருகோணமலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் அவரின் மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
குருவிட்ட பிரதேசத்தில் நபரொருவர் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். குப்பை கூழமொன்றிக்குள் தவறி விழுந்ததன் காரணமாக இந்நபர் மரணித்ததாக தெரிவிக்கப்பட்ட போதிலும், மரணம் சந்தேகத்திற்குரியதென உயிரிழந்தவரின் மனைவி காவல்நிலையத்தில் முறைப்பாடளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் நுவரெலியாவிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த தம்பதியினர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து 13 வயது சிறுமி ஒருவர் தாயின் காதலனால் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் களுத்துறையில் வீடொன்றுக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இவ்வாறு கடந்த வாரத்தில் இடம்பெற்ற, குற்றச் செயல்கள் அதனுடன் தொடர்புடைய விசாரணைகள், கைதுகள் உள்ளிட்ட தகவல்களை தொகுத்து வழங்கும் குற்றப் பார்வை இதோ,





ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
