இலங்கையின் கிரிக்கட்டில் இருந்து விலகிய முக்கியஸ்தர்!
இலங்கையின் கிரிக்கட் தொழில்நுட்பக் குழுவில் இருந்து ரொஸான் மகாநாம விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகவே தாம் இந்தக் குழுவில் இருந்து விலகியுள்ளதாக மஹாநாம அறிவித்துள்ளார்.
இலங்கையின் கிரிக்கட்டில் மிகவும் அனுபவம் வாய்ந்த நான்கு வீரர்களை,விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் பரிந்துரையின் பேரில் ஸ்ரீலங்கா கிரிக்கட் தொழில்நுட்பக் குழுவில் நியமித்தது.
இந்தக்குழுவுக்கு அரவிந்த டி சில்வா, தலைவராகவும் உறுப்பினர்களாக ரொஸான் மஹாநாம், முத்தையா முரளிதரன், குமார சங்கக்கார ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
இலங்கையின் கிரிக்கட் தொடர்பில், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தேசிய விளையாட்டுத்துறை சபை ஆகியவற்றுக்கு ஆலோசனைக் கூறுவதே இந்தக்குழுவின் பொறுப்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.


தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri