வவுனியாவில் மேலும் 4 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
வவுனியாவில் மேலும் 4 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் சில இன்று (09.05) இரவு வெளியாகின.
அதில், பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், நெடுங்கேணியில் உள்ள இராணுவத்தினர் இருவருக்கும், வீதி திருத்த பணியில் ஈடுபடும் மாமடுவைச் சேர்ந்த ஒருவருக்கும் என 4 பேர் மேலும் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
தொற்றுக்குள்ளான 4 பேரையும் கோவிட் வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள சுகாதார பிரிவினர், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
