இலங்கையில் இன்று பதிவாகிய கோவிட் தொற்றாளர்களின் நிலவரம்
நாட்டில் இன்று கோவிட் தொற்றுக்குள்ளான 1896 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் இன்று 970 பேர் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.இதனை தொடர்ந்து மேலும் 920 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதற்கமைய 1,890 தொற்றாளர்களாக எண்ணிக்கை அதிகரித்தது.
இந்நிலையில்,வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 6 பேருக்கும் இன்று கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதற்கமைய, இன்றைய தினம் மொத்தமாக 1896 பேர் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 123,234 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய,இலங்கையில் இன்று 22 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, நாட்டில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 786 ஆக அதிகரித்துள்ளன.
இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் ஒரே நாளில் இன்றைய தினமே அதிகளவான மரணங்கள் பதிவாகியுள்ளது. நேற்றைய தினமும் 19 கோவிட் மரணங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri
உலகக் கோப்பை நடுவர் செய்த கைசைகை., FIFA-விற்கு இனவெறி கண்காணிப்பு அமைப்பு விடுத்த கோரிக்கை News Lankasri