இலங்கைக்கான, கொரோனா ஆலோசனை மட்டத்தை குறைத்தது அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா, இலங்கைக்கான பயண ஆலோசனை மட்டத்தைக் குறைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்தப் பயண ஆலோசனை மற்றும் தூதரக தகவல் சேவையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் ஊடாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் மதிப்பாய்வின் அடிப்படையில், இந்த பயண ஆலோசனை மட்டம் குறைக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட பயண ஆலோசனையின்படி, இலங்கைக்கு பயணிக்க விரும்பும் பயணிகள், இலங்கைக்குள் பிரவேசிக்கும்போது கொரோனா சோதனை அறிக்கையை ஆங்கிலத்தில் காட்ட வேண்டும்.
பயணிகள், புறப்பட்ட 72 மணி நேரத்திற்குள் இந்தச் சோதனை எடுக்கப்பட வேண்டும். இந்தத் தேவையை நிறைவேற்றத் தவறியவர்கள் விமானத்தில் ஏற முடியாது.
அத்துடன், பயணிகள் வருகையின் போது கோவிட் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டியதில்லை அல்லது முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை என்றும் இந்த ஆலோசனையில் தொிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri