அஞ்சல் நிலையமாக மாறிய இலங்கை நாடாளுமன்றம்! முன்னாள் சபாநாயகர் ஆதங்கம்
20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டமை காரணமாக இலங்கையின் நாடாளுமன்ற அஞ்சல் நிலையாக மாற்றப்பட்டுள்ளது என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
இதன்படி ஜனாதிபதி எடுக்கும் தீ்ர்மானத்துக்கு முத்திரையிடும் நிலையமாகவே நாடாளுமன்றம் செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனநாயக சமூகத்தின் நல்லிணக்கத்துக்கான அரசியலமைப்பு தொடர்பான குழுவின் இரண்டாவது அமர்வு இன்று கொழும்பில் இடம்பெற்ற போது அவர் இதனைக்குறிப்பிட்டார்.
ஏற்கனவே மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்ட நாடாளுமன்றில், 20வது திருத்தத்தின் மூலம் தனி ஒருவருக்கு சர்வ அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இது ஜனநாயகத்தின் மீது பாரிய தாக்குதலாக கருதமுடியும் என்று கரு ஜெயசூரிய குறிப்பிட்டார்
இந்தநிலையில் தற்போதைய நிலையில் இலங்கைக்கு புதிய ஆரோக்கியமான அரசியலமைப்பு ஒன்று நாட்டுக்கு அவசியம்
எனவே நாட்டில் அனைவருக்கும் பொருத்தமான அரசியலமைப்பு தயாரிக்கப்படவேண்டும். அதில் பொதுமக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படவேண்டும் என்று கரு ஜெயசூரிய குறிப்பிட்டார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
