ஊசியால் குத்தி கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட குழந்தை! பின்னணியில் வெளியான தகவல்
காலி - பெந்தோட்டை, வடுமுல்ல பிரதேசத்தில் நோயிலிருந்து குணமாக்குவதாக கூறி மூன்றரை வயது சிறுமியை ஊசியால் குத்தி சித்திரவதை செய்ததாக கூறப்படும் பேயோட்டி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பெந்தோட்டை - வடுமுல்ல பிரதேசத்தில் மூன்று வயது சிறுமியொருவர் நோய் வாய்ப்பட்டமையினால் அருகில் உள்ள விகாரைக்கு பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர்.
இதன்போது சிறுமியின் உடலில் உள்ள நோயை குணப்படுத்துவதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டு சிறுமியின் தந்தைக்கு அறிமுகமான பேயோட்டி ஒருவர் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சிறுமியின் உடலில் உள்ள நோயை குணப்படுத்தல்
சிறுமியின் உடலுக்குள் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய நோய் இருப்பதால், கடவுளின் கட்டளைப்படி அதனை குணப்படுத்த முடியும் என்று கூறி, சிறுமியின் உடலில் இருந்து இரத்தம் வரும் வரை ஊசியால் குத்தி சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்காக பேயோட்டி சிறுமியின் பெற்றோரிடமிருந்து மூன்று தடவைகளில் இரண்டு இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
இதன்போது சிறுமி கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் தந்தையினால் அளுத்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டமைக்கமைய பேயோட்டியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri