நாட்டில் நிலவும் உயர் பணவீக்கம்: எரிபொருள் விற்பனையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
நாட்டில் நிலவும் உயர் பணவீக்கம் காரணமாக, தினசரி எரிபொருள் விற்பனை சுமார் 40% குறைந்துள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டின் பொருளாதாரம் சாதாரண நிலையில் இருந்த போது நாளொன்றுக்கு சுமார் ஐயாயிரம் மெற்றிக் தொன் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளொன்றுக்கு விற்பனை செய்யப்படும் பெட்ரோலின் அளவு சுமார் இரண்டாயிரம் மெற்றிக் தொன்களாகவும், டீசல் விற்பனை சுமார் 1800 மெற்றிக் தொன்களாகவும் குறைந்துள்ளது.
எரிபொருள் விற்பனை வீழ்ச்சி
இதேவேளை, சாதாரண நிலைமைகளின் போது நாளொன்றுக்கு சுமார் 4800 மெற்றிக் தொன் டீசல் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், தற்போது நாளொன்றுக்கு சுமார் 3000 மெற்றிக் தொன் டீசல் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், அடுத்த வருடம் முதலாம் திகதி VAT வரி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்பட்டால் எரிபொருள் விற்பனை மேலும் வீழ்ச்சியடையும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், எரிபொருள் விற்பனை குறையும் பட்சத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை பராமரிக்க முடியாத நிலை ஏற்படும் எனவும் பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |