அரச பேருந்துகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள கியூ ஆர் கட்டண முறைமை
அரச பேருந்துகளுக்கான கட்டணத்தை சுமார் 1000 ரூபாய் குறைக்கும் வகையில் மின்னணு அட்டை அல்லது QR குறியீட்டைக் கொண்ட கட்டண முறையை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
பயணச்சீட்டுகளுக்கு பணம் செலுத்துவதற்கு இலத்திரனியல் அட்டை அல்லது கியூ ஆர் (QR ) குறியீட்டு முறைமையை அறிமுகப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு செயற்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (11) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாளொன்றுக்கு 10 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்படுவதே இதற்கு காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டம் தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், இலங்கை போக்குவரத்துச் சபையினால் புதிய இணையத்தளத்தில் பணம் செலுத்தும் முறை திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், சில பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் அன்றைய மொத்த வருமானத்தை அந்தந்த டிப்போக்களுக்குத் திருப்பித் தருவதில்லை எனவும், இதனால் சுமார் ஒரு கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
QR குறியீடு மூலம் பணம் செலுத்தும் முறை
எனவே இரண்டு மாதங்களில் இலத்திரனியல் அட்டை அல்லது QR குறியீடு மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த முன்முயற்சியானது 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைக்காக அறிவிக்கப்பட்ட அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதி எனவும், 2024 ஆம் ஆண்டு இதனை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
you may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri
