15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தியவருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
பாடசாலை செல்லும் பதின்ம வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கூட்டிச்சென்று குடும்பம் நடத்திய 21 வயது இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த நபரை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து வந்து கல்வியங்காடு பகுதியில் தங்கி நின்ற இளைஞன் உறவு முறையான 15 வயது சிறுமியினை காதலித்து வந்துள்ளார்.
நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
அச்சுவேலியில் பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து குறித்த சிறுமியை அழைத்து சென்ற இளைஞன் சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தியுள்ளார்.
இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதனைத்
தொடர்ந்து இந்த விடயம் காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரின்
கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில், காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது
செய்யப்பட்ட இளைஞன் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டவேளை நீதிவான்
இந்த உத்தரவினை வழங்கியுள்ளார்.





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
