தகுந்த மனிதன்: தகுந்த நேரத்தில்: தகுந்த தொழிலில்
மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டமையை அடுத்து தேசிய ஆங்கில செய்தித்தாள் அவருக்காக பிரசுரித்துள்ள சிறப்பு கடிதம்.
என் அன்பான நந்தே,
ஒரு காலத்தில் சொர்க்கமாக இருந்த எங்கள் குட்டித் தீவுக்கு நீங்கள் திரும்பி வருகிறீர்கள் என்று கேள்விப்பட்டு இந்த வாரம் உங்களுக்கு எழுதுகிறேன்.
பெரிய வங்கியின் ஆளுநர் பதவியை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் அதே வங்கியில் உங்கள் பணிக்காலம் முழுவதையும் நீங்கள் செலவிட்டீர்கள்.
அழிவு மற்றும் இருள் நிறைந்த இந்த நேரத்தில் இது ஒரு அரிய நல்ல செய்தி.
எனக்கு உங்களைத் தனிப்பட்ட முறையில் தெரியாது என்றாலும், உங்கள் நண்பர்கள் சொல்வதை நான் உறுதியாக நம்புவதால், நான் உன்னை ‘நந்தே’ என்று அழைப்பதை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
உங்களைப் போன்ற பெயர்களைக் கொண்ட சிலர் 'நந்தே' என்று அழைக்கப்படுவதையோ அல்லது அவர்களின் முழுப் பெயரை சொல்வதையோ விரும்பாததால் நான் இதைச் சொல்கிறேன்!
உண்மையைச் சொல்வதென்றால், நந்தே, நீங்கள் பெரிய வங்கியின் அதிபராக இருக்கும் அழைப்பை ஏற்றுக்கொண்டதைக் கேட்டு நாங்கள் ஆச்சரியப்பட்டோம்.
ஒரு காலத்தில் ஒவ்வொரு அரசியல்வாதியின் கனவாக இருந்த அமைச்சு பதவிகளை கூட பொறுப்பேற்காமல் இருக்கும் காலம் இது.
சப்ரி என்ற சட்டத்தரணி, பண விவகாரங்களில் பசிலை விட சற்றே மேம்பட்ட அனுபவம் பெற்றவர், நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அதுவும் வேலை செய்யவில்லை. 24 மணி நேரம் கழித்து, சப்ரி தனது ராஜினாமாவை அனுப்பிய நிலையிலேயே நீங்கள் பொறுப்பை ஏற்றுள்ளீர்கள்.
நாங்கள் ஆச்சரியப்பட்டதற்கு மற்றொரு காரணம், நந்தே, நீங்கள் பெரிய வங்கியிலிருந்து ஓய்வு பெற்ற சூழ்நிலையாகும்.
ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக அங்கு செலவழித்து, வழியில் பல பாராட்டுக்களைப் பெற்ற பிறகு, தகுதியின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டிருந்தால், உயர் பதவிக்கு நீங்கள் மிகவும் தகுதியான மற்றும் பொருத்தமானவராக இருந்திருப்பீர்கள்.
நீங்கள் பல ஆண்டுகளாக துணை ஆளுநராகத் தவித்துக் கொண்டிருந்தபோது, ஆளுநர்கள் வந்து சென்றார்கள்: அர்ஜுனன், இந்திரஜித், லக்ஸ்மணன். அவர்களில் ஒரு வேளை இந்திரஜித் மட்டுமே அந்த வேலைக்குப் பொருத்தமானவர். அர்ஜுனன் என்ன செய்தார்; என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
வயதான லக்ஸ்மண் ஓய்வு பெறும் நேரத்தில், நேர்மையான வேலையைச் செய்ய உங்களை அனுமதிக்கவில்லை என்று வெறுப்புடன் முன்கூட்டியே ஓய்வு எடுத்துவிட்டீர்கள்.
ஒருமுறை பாராசூட் மூலம் நாடாளுமன்றத்திற்குள் சென்ற கப்ரால், மீண்டும் பெரிய வங்கிக்குள் பாராசூட் மூலம் தள்ளப்பட்டார்.
சேர்! சொன்ன எல்லாவற்றுக்கும் 'ஆம், ஐயா” என்று சொல்ல வேண்டும். இப்போது கப்ரால் தோல்வியுற்றபோது, ஐயாவும் தோல்வியடைந்துள்ளார்
ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கோதா மாமா, அப்போது ஆளுநராக இருந்த லட்சுமணன் உள்ளிட்ட பெரிய வங்கியின் உயர் அதிகாரிகளான உங்கள் அனைவரையும் எப்படி அமரவைத்தார் என்பதும் எங்களுக்கு நன்றாக நினைவிருக்கிறது.
பின்னர் அவர்;, முழு தேசமும் பார்க்க உங்கள் அனைவருக்கும் கடுமையாக வசைபாடினார்.
நீங்கள் அனைவரும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு வேலையில் தூங்கிக் கொண்டிருந்தீர்கள், பொருளாதாரத்தின் அடிப்படைகள் தெரியாமல், மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு ஒத்துழைத்து, அரசாங்கத்தை சிக்கலில் சிக்க வைக்க முயற்சிப்பதாக அவரால் குற்றம் சாட்டப்பட்டது.
'பொருளாதாரத்தின் அடிப்படைகள்” பற்றி அதிகம் தெரியாதவர் யார் என்று இப்போது நமக்குத் தெரிந்துவிட்டது.
ஆனாலும், அவர் தனது சொந்த வார்த்தைகளை திரும்பப்பெற்று உங்களுக்கு ஆளுநர்; பதவியை வழங்கும் அளவுக்கு பணிவாக நடந்துக்கொண்டார்.
நீங்கள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு பெருந்தன்மையுடன் இருந்தீர்கள்
உங்கள் கவலைகள், உங்களுக்கு முன் யார் என்ன செய்தார்கள் என்பதல்ல. மாறாக நாங்கள் இருக்கும் குழப்பத்தில் இருந்து நம் அனைவரையும் வெளியேற்றுவது என்பதாகும் என்பதில்; நான் உறுதியாக இருக்கிறேன்.
எங்கள் நிலைமை மோசமானது என்றும், விரைவில் சரி செய்ய முடியாது என்றும் நீங்கள் ஏற்கனவே கூறியுள்ளீர்கள். உங்கள் நேர்மையை நாங்கள் பாராட்டுகிறோம்,
எனினும் அதிகாரத்தில் இருப்பவர்கள் 'வீட்டுக்குச் செல்லுங்கள்' என்று கேட்கப்படுபவர்கள், அதனை தான் விரும்புவார்கள்.
எனவே அவர்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருங்கள்:
எனவே, நந்தே, உங்களால் அதை வழங்க முடியாவிட்டால், அவர்கள் 'வீட்டிற்குச் செல்லுங்கள்' என்ற கோரிக்கை அதிகமாகிவிட்டால், நீங்களும் 'வீட்டுக்குச் செல்லுங்கள்' என்று கட்டாயப்படுத்தப்படலாம்.
நீங்கள் பெரிய வங்கியின் ஆளுநர் பதவியை எடுத்துக் கொண்டபோது அந்த அபாயங்களைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
'காகங்கள்' கூட தங்கள் விருப்பத்திற்கு மாறாக அமைச்சரவையை விட்டு வெளியேற வேண்டிய நிச்சயமற்ற நேரம் இது.
அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் விரைவில் நிறைய நடக்கும் என்று கணிக்க எவரும் ஒரு மேதையாக இருக்கத் தேவையில்லை.
நந்தே, அந்த மாற்றங்களைச் சமாளிக்கும் தைரியம் உங்களுக்கு இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
ஒரு மனிதனால் மட்டுமே அரசின் கப்பலை மூழ்கடிக்க முடியும் என்றாலும், அதைக் காப்பாற்ற ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர்கள் தேவைப்படுவது நமக்குத் தெரியும்.
உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்!
நந்தே, இந்த வாரம் உங்களைப் பார்த்துபோது சூட் மற்றும் டை அணிந்து, கண்ணாடி அணிந்து, மீசையுடன், நீங்கள் மற்றும் ஒரு 'நந்தே'யின் இளைய பதிப்பைப் போலவே தோற்றமளித்தீர்கள்.
வித்தியாசம் என்னவென்றால், "மே அர்புதய மா விசின் நிர்மாணயா கரண லதக் நோவே" அல்லது "இது நான் உருவாக்கிய நெருக்கடி அல்ல" என்று நீங்கள் நேர்மையாகச் சொல்லலாம் என்பதேயாகும்.






பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam
