முல்லைத்தீவு மாவட்ட வைத்தியர் ஜெயகுலராஜாவுக்கு சிறீதரன் அஞ்சலி
முல்லைத்தீவு(Mullaitivu) மாவட்ட வைத்திய பொறுப்பதிகாரியாக (RBHS) பணியாற்றிய வைத்தியர் ஜெயகுலராஜாவுக்கு (Dr. T.W Jeyakularajah) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(Sivagnanam Shritharan) அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சுதந்திர இலட்சியம் நோக்கி நிகழ்த்தப்பட்ட விடுதலைப் போரில் அர்ப்பணிப்பும் உயர்வும் மிக்க உன்னத பணிகளால் தேசத்தை செதுக்கிய சிற்பி தனது நிபுணத்துவ ஆற்றலால் விடுதலைப் போரின் பல் பரிமாணத் தன்மையை உலகுக்கு உணர்த்திய மருத்துவர் ஜெயகுலராஜா நேற்று(16.06.2024) காலமானார்.
கௌரவம் அளித்து அஞ்சலி
இந்நிலையில், இன்று(17) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமிழரசு கட்சியின் கொடியினை அணிவித்து கௌரவம் அளித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதேவேளை, கணுக்கேணி முள்ளியவளையைச் சேர்ந்த அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவுக்கு ஆரம்ப காலங்களில் பயிற்சியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
May You Like This,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |