உயிருக்கு போராடும் சாந்தன்: தமிழக முதல்வருக்கு இலங்கையில் இருந்து பறந்த அவசர கடிதம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி தமிழக முதல்வருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
மறைந்த இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டு, 32 வருட சிறைத்தண்டனையின் பின் கடந்த 2022.11.11 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், முருகன், ரொபேட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் இலங்கைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியே சிறீதரன் குறித்த கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.
இதுதொடர்பில் சாந்தனின் தாயாரால் தனக்கு சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைக் கடிதத்தை மேற்கோள் காட்டி அவரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இரு தரப்புகளுக்கும் இடையிலும் கொதிநிலை! தமிழரசுக் கட்சியின் தெரிவு குறித்து சிறீதரன் வெளியிட்ட கருத்து
உச்ச நீதிமன்றத்தால் விடுதலை
“32 ஆண்டுகால சிறைத்தண்டனையின் பின்னர் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு ஒருவருடம் கடந்துள்ள நிலையில், அவ்வழக்கிலிருந்து விடுதலையான இலங்கைப் பிரஜைகளான சாந்தன், முருகன், ரொபேட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் இலங்கைக்கு வரவழைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சிகளும் பலனளிக்காததால் இன்றுவரை அவர்கள் நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தாங்கள் கரிசனையோடு அணுகுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
தனது இளமைக்காலம் முழுவதையும்; சிறையில் கழித்து, முதுமைக்காலத்தில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு என்பவற்றால் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சாந்தன், தற்போது சென்னை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு கடந்த 33 ஆண்டுகளாகத் தனது மகனைக் காணாது பரிதவித்திருக்கும் சாந்தனின் தாயார், 77 வயது நிரம்பிய தனது முதுமை நிலையில் ஒருதடவையாவது தனது மகனை நேரில் பார்வையிட வேண்டும் எனவும், அவரை இலங்கைக்கு வரவழைக்க ஆவனசெய்யுமாறும் மிக உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
இந்நிலையில், தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதிலிருந்து ஈழத்தமிழர்கள் விடயத்தில் அதீத கரிசனை கொண்டிருக்கும் தாங்கள், இவ்விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுகி நோய்வாய்ப்பட்டிருக்கும் சாந்தனின் உடல்நிலை கருதியும், அவரது குடும்பத்தினரின் உணர்வுநிலைப்பட்ட எதிர்பார்ப்பைக் கருத்திற்கொண்டும் சாந்தன் உள்ளிட்ட நால்வரையும் இலங்கைக்கு அனுப்பிவைக்க ஆவனசெய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri

கைவிடப்பட்ட குழந்தையை மீட்ட இளம்பெண்: பிரபல நடிகையின் சகோதரி குஷ்பூவுக்கு குவியும் பாராட்டுகள் News Lankasri
