மே தின எழுச்சி பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ள சிறீதரன் எம்.பி
வடக்கு மாகாணம் தழுவிய இலங்கை தமிழரசுக் கட்சியானது கிளிநொச்சி மாவட்டத் தொழிற்சங்கங்களுடன் இணைந்து நடாத்துகின்ற மே தின எழுச்சி பேரணிக்கு சிறீதரன் எம்.பி அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த கூட்டமானது நாளை(01.05.2024) கிளிநொச்சி மத்திய கல்லுரி மைதானத்தில் மாலை 2 மணிக்கு ஊர்வலமாக ஆரம்பித்து, 3 மணியளவில் கூட்டமும் தொடங்கி மிகவும் எழுச்சியாக நடைபெறுவதற்குரிய முயற்சிகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், உலகத் தொழிலாளர்களுடைய நிலைகளை தெளிவுப்படுத்துகின்ற அதே நேரம் தமிழ் தொழிலாளர்களுடைய எண்ணங்களையும் பிரதிப்பலிக்கின்ற இந்த மே எழுச்சி நாள் என்பது தமிழ் மக்களின் உரிமைகளோடும் அது இறுக பிணைந்து இருப்பதன் காரணமாக அந்த அரசியல் உரிமைகளை வெளிப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
காலம் காலமாக தமிழர்கள் அடக்குமுறைக்குள்ளும், ஒடுக்குமுறைக்குள்ளும் நசுங்கி கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியை உலகப்பரப்பிற்கு சொல்லுவதற்காகவும் தமிழ் தேசிய மே நாள் எழுச்சி நிகழ்வுகள் நாளை நடைபெற இருக்கிறதென குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
