சிவனொளிபாத யாத்திரைக் காலம் இன்றுடன் நிறைவு
தற்போதைய சிவனொளிபாத யாத்திரைக் காலம் இன்றுடன்(30.05.2026) நிறைவடையவுள்ளதாக ஸ்ரீ பாதவிகாராதிபதி பெங்கமுவே தம்மதின்ன தேரர் தெரிவித்துள்ளார்.
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஸ்ரீ பாத உட மலுவவில் (மேல் பிரகாரம்) பல்வேறு சமய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த யாத்திரைக் காலம்
வெசாக் பௌர்ணமிக்கு அடுத்த நாளான 31 ஆம் திகதி, ஸ்ரீ பாத உட மலுவவில் நடைபெறும் சமயக்கிரியைகளைத் தொடர்ந்து, மேல் பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ள புனிதப் பேழை, சமன் தெய்வ சிலை மற்றும் தெய்வ ஆபரணங்கள் ஆகியவை கல்பொத்தாவல பெல்மதுளையில் உள்ள ஸ்ரீ பாத ராஜமகா விகாரைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.

புனிதப் பேழை, சமன் தெய்வ சிலை மற்றும் தெய்வ ஆபரணங்கள் ஆகியவை அங்கு வந்தடைந்தவுடன், அடுத்த யாத்திரைக் காலம் ஆரம்பமாகும் விகாரையில் வைக்கப்படும் என்றும் பெங்கமுவே தம்மதின்ன தேரர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
விளம்பரத்தில் நடிக்க நடிகர் அஜித்குமார் வாங்கும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?... அடேங்கப்பா Cineulagam
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan