தோட்டத் தொழிலாளர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தோட்டத் தொழிலாளர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பதுளைக்கான புதிய ஆயர் ஜூட் நிசாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
பாப்பரசர் பிரான்சிஸ், கடந்த 30ஆம் திகதியன்று பதுளையின் புதிய ஆயராக ஊவா சமூக - பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளர் ஜூட் நிசாந்த சில்வாவை பெயரிடப்பட்டார்.
இந்த நிலையில் பெருந்தோட்டத்துறையின் மக்கள் தொடர்பில் அவரின் கருத்தை கிறிஸ்தவ செய்தித்தளம் ஒன்று பகிர்ந்துள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு உண்பார்கள், ஆனால் இப்போது அது ஒரு வேளை உணவாக மட்டுமே மாறியுள்ளது புதிய ஆயர் தெரிவித்துள்ளார்.
அடிப்படை உரிமைகளை வழங்க தவறியுள்ள இலங்கை சமூகம்
இந்தியாவில் இருந்து தேயிலை தொழிலாளர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு 200 வருடங்களுக்கு மேலாகியும், அவர்களின் அடிப்படை உரிமைகளைக் கூட வழங்க இலங்கை சமூகம் தவறியுள்ளது.
பதுளை மறைமாவட்டத்தில் பெரும்பான்மையான மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.
தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த இந்தியத் தொழிலாளர்கள் 1820களில் மேலைநாடுகளில் மலிவான கூலியில் தொழிலாளர்கள் இல்லாததால் ஆங்கிலேயர்களால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த கூலீஸ் என்ற இந்த தொழிலாளர்கள், நூற்றாண்டின் தொடக்கத்தில், இலங்கையின் சனத்தொகையில் 7 வீதமானவர்களாக இருந்தனர்.
இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களில் 52 சதவீதத்திற்கும் அதிகமானோர் நிலமற்ற
நிலையில், இலங்கையில் தொழிலாளர்கள் மதிப்புச் சங்கிலியின் அடிமட்டத்தில்
வைக்கப்பட்டுள்ளனர் என்றும் புதிய ஆயர் ஜூட் நிசாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
