இலங்கை அரசாங்கத்தின் ஊழல் ஆட்சிக்கு எதிராக பிரித்தானியாவில் போராட்டம்
இலங்கை அரசாங்கத்தின் ஊழல் ஆட்சிக்கு எதிராக பிரித்தானியாவின் ஹென்லி பிரதேசத்தில் வசிக்கும் இலங்கையர்கள் குழுவொன்று, இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை முழுவதும் அரசுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கியிருக்கும் அதேசமயம் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும், இலங்கை மக்களுக்கு ஆதரவு தெரிவித்து தாங்கள் வசிக்கும் நாடுகளின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களை உடனடியாக இராஜினாமா செய்து, நாட்டை கட்டியெழுப்பக்கூடிய அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு இலங்கையில் உள்ள மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் அவுஸ்திரேலியா - மெல்போர்ன் நகரிலும், ஜப்பான் - டோக்கியோ மற்றும் பல நகரங்களிலும் நேற்றையதினம் இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு, எதிர்ப்பு பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
அத்துடன் கடந்த வாரம் ஸ்கொட்லாந்தின் பேர்த் மற்றும் டண்டி மற்றும் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கிலும் இலங்கையர்கள் தங்கள் தாயகத்தைப் பாதுகாக்கக் கோரி போராட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam