வரி செலுத்த தவறியுள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
உள்நாட்டு இறைவரித்திணைக்களத்திற்கு இதுவரை 20,000 கோடி ரூபாவை பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் செலுத்த தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரி செலுத்தாதவர்களில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வரி பாக்கிகள் தொடர்பில் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய,
உள்ளூர் வருமான வரி கட்டளைச்சட்டம்
நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு சில தரப்பினர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும்,வருவாய்களை வசூலிப்பது குறித்து அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நிலுவைத் தொகையை மீட்பதற்காக உள்ளூர் வருமான வரி கட்டளைச் சட்டம் புதுப்பிக்கப்பட்டு அதற்கேற்ப திருத்தப்படும் என்றும் சியாம்பலாபிட்டிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அதிக வருமானம் ஈட்டும் வைத்தியர்கள், சட்டத்தரணிகள், ஆசிரியர்கள், ஜோசியம் சொல்பவர்கள் மற்றும் பலர் நீண்ட காலமாக வரி ஏய்ப்பு செய்து வருவதாக நிதி அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
