தொழில் தேடி வெளிநாடுகளுக்கு படையெடுக்கும் இலங்கையர்கள்
இலங்கையில் இருந்து கடந்த பதினொரு மாத காலப்பகுதிக்குள் மூன்று இலட்சத்துக்கும் அதிமான மக்கள் வெளிநாடுகளுக்குத் தொழில் தேடி பயணித்துள்ளனர்.
இவர்களில் சுமார் 2 லட்சத்தி 89 ஆயிரத்து 395 பேர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக சென்றுள்ளனர்.
மேலும் பதினைந்தாயிரம் பேர் அளவில் பதிவு செய்யாத நிலையில் சட்டவிரோத வழிகளில் பயணித்துள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
இந்த வருட இறுதிக்குள் இலங்கையில் இருந்து சட்டரீதியான பதிவுகளுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து பத்தாயிரத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கமைய, நாளொன்றுக்கு 850 பேர் இலங்கையில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக நாட்டை விட்டும் வெளியேறிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் மேற்பட்ட 95 வீதமானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கே தொழில் தேடிச் சென்றுள்ளனர்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
