ரஞ்சனுக்கு ஆதரவாக ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்!
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஆதரவாக இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் நேற்று ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் அண்மையில் கொலைக் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கும், கடுமையான குற்றச்சாட்டின் பேரில் தண்டிக்கப்பட்டவர்களுக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
ரஞ்சன் ராமநாயக்க போன்ற மக்கள் பிரதிநிதியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான ஒருவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்காதது அரசியல் பழிவாங்கும் நோக்கம் என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அநீதி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கையர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இது தொடர்பில் விசாரணை நடத்தி தலையிட்டு முன்னாள் எம்.பி.யை விடுதலை செய்ய உதவுமாறு கோரிக்கை மனுவொன்றை கையளித்திருந்தனர்.
மேலும் பல நகரங்களிலும் இதேபோன்ற போராட்டங்களை நடத்த உள்ளதாகவும், மேலும் மற்றொரு மனுவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐசிசி) கையளிப்பதாகவும் போராட்டக்காரர்கள் மேலும் தெரிவித்தனர்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 7 மணி நேரம் முன்

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
