அறுவை சிகிச்சைகளை துரிதப்படுத்த விசேட நடவடிக்கை
அரச வைத்தியசாலைகளில் (Government Hospitals) பணி நேரத்தின் பின்னர் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளை துரிதப்படுத்துவதற்காக, கடமை நேரத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்கான, ஊக்கத்தொகையை வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை நேற்று (28) முதல் தடவையாக கூடிய போது இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.
சத்திரசிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியல்
ஜனாதிபதி நிதியத்தின் நன்மைகளை மக்களுக்கு வினைத்திறனாக வழங்குவதற்கான திட்டங்களை தயாரித்தல், தற்போதுள்ள பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

மேலும், அரச மருத்துவமனைகளில் சத்திரசிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் அதிகளவானோர் காத்திருப்பது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி நிதியச் செயலாளர் ரொஷான் கமகே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
    
    
    
    
    
    
    
    
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri