இஸ்ரேலில் பணியமர்த்தப்படும் இலங்கையர்கள் : கைச்சாத்தப்பட்ட ஒப்பந்தங்கள்

Sri Lanka Sri Lankan Peoples Israel
By Sheron Mar 21, 2024 01:16 PM GMT
Report
Courtesy: Ministry of Labour & foreign Emp

இஸ்ரேலில் இலங்கைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த இரு நாட்டு அரசாங்கங்களுக்கிடையில் ஒப்பந்தங்கள் கைச்சாதப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் வீடு சார்ந்த பராமரிப்பு, ஹோட்டல்கள், உணவகங்கள், நிர்மாணம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் இலங்கைப் பணியாளர்களுக்கு வரும் நாட்களில் வேலைவாய்ப்புக்கள் கிடைக்கப்பெறவுள்ளன.

இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்காகவும், அந்நாட்டு அதிகாரிகளுடன் இது தொடர்பான வேறு சில உடன்படிக்கைகளை மேற்கொள்ளவதற்காக அமைச்சர் இஸ்ரேலுக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இஸ்ரேலில் பணியமர்த்தப்படும் இலங்கையர்கள் : கைச்சாத்தப்பட்ட ஒப்பந்தங்கள் | Sri Lankans Employed In Israel

இப்பயணத்தின் போது உள்நாட்டு அமைச்சர், நிர்மாணத்துறை அமைச்சர், போக்குவரத்து அமைச்சர், தொழிலாளர் அமைச்சர் மற்றும் வெளிநாட்டு அமைச்சர் உட்பட ஐந்து அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

இஸ்ரேலிய தொழில் அமைச்சருடனான கலந்துரையாடலின் போது, இலங்கைத் தொழிலாளர்களின் பணி நிலைமைகள், பாதுகாப்பு மற்றும் சம்பளம் குறித்து கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இஸ்ரேலில் நிர்மாணத்துறையில் வேலை வாய்ப்புகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நடமாடும் சேவை

இதுவரை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் இவ்வேளை வாய்ப்புகளுக்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க ஒரு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு தேர்வு மே மாத ஆரம்பத்தில் நடத்தப்பட உள்ளது.

இஸ்ரேலில் பணியமர்த்தப்படும் இலங்கையர்கள் : கைச்சாத்தப்பட்ட ஒப்பந்தங்கள் | Sri Lankans Employed In Israel

தற்போது ஹோட்டல் மற்றும் உணவகத் துறையில் தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுகின்றமையால் அவற்றை நிரப்புவதற்கும் வேலையாட்கள் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அதிகளவிலான பெண்களை விவசாயத் துறைக்கும் அனுப்ப தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் நாடு முழுவதும் நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் ஜயகமு ஸ்ரீ லங்கா மக்கள் நடமாடும் சேவை ஊடாக இஸ்ரேலிய தொழில் வாய்ப்புகளுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே நாளை மற்றும் நாளைமறுதினம் (22 ,23 ) மாத்தளை எட்வர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்து கொண்டு பதிவுகளை மேட்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியின் தகாத செயல்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியின் தகாத செயல்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

 

வவுனியா சிறைச்சாலை தொடர்பில் வெடுக்குநாறிமலையில் கைதானவர்கள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்

வவுனியா சிறைச்சாலை தொடர்பில் வெடுக்குநாறிமலையில் கைதானவர்கள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US