சென்னை விமான நிலையத்தில் இரு இலங்கையர்கள் திடீரென மயங்கி விழுந்து மரணம்
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை (28) ஒரே நாளில் இலங்கையர்கள் இருவர் மாரடைப்பினால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.
சென்னை மீனம்பாக்கம் ஒருங்கிணைந்த பன்னாட்டு விமான முனையத்தில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்திற்கு அலையன்ஸ் ஏர் விமானம் நேற்று காலை புறப்படத் தயாராகியுள்ளது.
இந்த விமானத்தில் பயணிக்க வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவகஜன் லிட்டி (43) என்ற பெண், பாதுகாப்பு சோதனை பிரிவில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதனை தொடர்ந்து உடனடியாக விமான நிலைய மருத்துவக்குழுவினர் வருகை தந்து பரிசோதனை செய்துள்ளதுடன், அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும், இலங்கையைச் சேர்ந்த ஜெயக்குமார் (48) என்பவர் தனது மனைவியுடன் பிசினஸ் விசாவில் சென்னைக்கு சென்றிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
விமான நிலைய மருத்துவ குழுவினர் வந்து பரிசோதனை செய்ததில் அவரும் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி விமான நிலைய பொலிசார் வழக்குப்பதிவு செய்து,
சென்னையில் உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இலங்கை பயணிகள் உயிரிழந்தமை குறித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
