ராஜிவ்காந்தி கொலை வழக்கு!விடுதலையான இலங்கையர்கள் எங்கே:வெளியான தகவல்
இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு நான்கு இலங்கையர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இருந்து குறித்த இலங்கையர்கள் விடுவிக்கப்பட்டு நான்கு மாதங்கள் கடந்துள்ளன.
இருப்பினும் அவர்கள் தொடர்ந்தும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நாடு திரும்பாமைக்கு காரணம்
இது தொடர்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக உயர் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகன், சாந்தன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய நான்கு இலங்கையர்களும் இந்தியாவில் இருந்து வெளியேறுவது குறித்து அரசாங்கத்தின் முடிவு நிலுவையில் இருப்பதன் காரணமாக அவர்கள் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நால்வரில் மூவர், ஐரோப்பிய நாடுகளில் தங்களது உறவினர்கள் வசிப்பதால் அந்த நாடுகளுக்கு செல்வதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
எனினும், சாந்தன் மாத்திரம் இலங்கை திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்த நிலையில், அவரது ஆவணங்கள் மீதான பரிசீலனையும் தொடர்ந்தும் நிலுவையில் உள்ளமையே அவர் நாடு திரும்புவதில் ஏற்பட்டுள்ள தாமதமாகும்.”என கூறியுள்ளார்.
ராஜிவ்காந்தி படுகொலை
1991ம் ஆண்டு ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இந்திய உயர் நீதிமன்றினால் தண்டனை உறுதி செய்யப்பட்ட ஏழு பேரில் பேரறிவாளன் கடந்த ஆண்டு மே மாதம் விடுவிக்கப்பட்டார்.
இதேவேளை நளினி, சாந்தன், முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் குறித்த வழக்கில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உயர் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
