கொரியாவில் உயிரிழந்த இலங்கை இளைஞருக்கு நட்டஈடு! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
கொரியாவில் உயிரிழந்துள்ள கண்டியை சேர்ந்த இளைஞனின் குடும்பத்திற்கு நட்ட ஈடாக, ஒன்பது மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு கொரிய தூதரகம் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
கொரியாவில் உயிரிழந்த கண்டி, உடதலவின்னையைச் சேர்ந்த இளைஞனுக்கு நட்டஈடு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடர்பில் லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.
அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
கொரியாவில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை கொரிய தூதரகத்தின் உதவியுடன் நான்கு நாட்களில் நாட்டுக்கு கொண்டுவர முடிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் குடும்பத்துக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பாக கொரிய தூதரகத்துடன் நாம் கலந்துரையாடினோம்.இதன் பயனாக ஒன்பது மில்லியன் ரூபா நட்ட ஈட்டுத்தொகையை வழங்க அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று ஜனாசாவை நாட்டுக்கு கொண்டுவர ஏற்பட்ட செலவையும், கொரிய தூதரகம் ஏற்றுக்கொள்ள உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் அலி சப்ரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.





ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri
