வெளிநாட்டு தடுப்பு முகாமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்கள்! கவனம் செலுத்துமாறு கோரிக்கை
துபாயில் உள்ள தடுப்பு முகாமொன்றில் இலங்கைகைய சேர்ந்த சுமார் 85 இலங்கை பெண்கள் அறையொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஊடகமொன்றிற்கு இது தொடர்பான தகவலை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தம்புள்ளை பகுதியில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் ஊடாக வீட்டுப்பணி பெண்ணாக துபாய் சென்ற பெண் ஒருவர் தடுப்பு முகாமில் மூன்று மாதங்கள் தங்கியிருந்து அண்மையில் நாடு திரும்பிய நிலையில்,தனக்கு நிகழ்ந்த கொடுமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இருப்பினும்,தனக்கு துபாயில் நடந்த கொடுமைகளை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், தம்புள்ளை பொலிஸ் மற்றும் வெளிநாட்டில் உள்ள வேலை முகவரகத்தில் தெரிவித்த போதிலும் இதுவரை தமக்கான நீதி கிடைக்கவில்லை என்றும் குற்றம்சுமத்தியுள்ளார்.
இதேவேளை, தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தினால் துபாய்க்கு அனுப்பப்பட்ட பல பெண்கள் அறையொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 13 மணி நேரம் முன்
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri
அவுஸ்திரேலியா அணிக்காக சதமடித்த முதல் இந்தியர்! 184 பந்துகளில் 163 ஓட்டங்கள்..சிட்னியில் ருத்ர தாண்டவம் News Lankasri
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam